தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

பரமத்தியில் இன்று அ.ம.மு.க. பொதுக்கூட்டம்: தினகரன் பங்கேற்பு

பரமத்தியில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் புதன்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 8:50 am IST

பரமத்தியில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் புதன்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் கழக துணை பொதுச் செயலர் தினகரன் கலந்துகொண்டு பேசுகிறார்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள  பரமத்தியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்துக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர் சாமிநாதன் தலைமை வகிக்கிறார். கிழக்கு மாவட்டச் செயலர் சம்பத்குமார் வரவேற்று பேசுகிறார். கழக துணை பொதுச் செயலர் தினகரன் கலந்துகொண்டு விழா சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்தில், கழக அவைத் தலைவர் அன்பழகன், கழகப் பொருளாளர் ரெங்கசாமி, கழக தலைமை நிலையச் செயலர் பழனியப்பன், கழக கொள்கை பரப்புச் செயலர் தமிழ்ச்செல்வன், கழக தேர்தல் பிரிவு செயலர் செந்தமிழன், கழக அமைப்புச் செயலர் ரவிக்குமார், புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் ராஜ்கவுண்டர், அம்மா பேரவை இணைச் செயலர் பழனிவேல், வர்த்தக அணி இணைச் செயலர் நல்லியப்பன் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
பேசுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.