/

ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் அவதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்தால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாயினர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:50 am IST

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்தால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாயினர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி திறக்கப்படாததால், பள்ளிக்கு சென்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், பல்வேறு பள்ளிகளில் வகுப்பறைகள் பூட்டியே இருந்ததால், பல மணி நேரம் மாணவர்கள் காத்திருந்தனர்.
ராசிபுரம் காட்டூர் சாலையில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளி வாயிற்கதவு திறக்கப்படாத நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் வந்து பள்ளியை
திறந்துவிட்டனர்.
இதேபோல், கூனவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் வராததால், வகுப்பறைகள் திறக்கப்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியிலேயே அமர்ந்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.