குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மானிய விலை ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On :24 ஜனவரி 2019, 4:43 am IST

வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019ஆம் நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் அரசு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்,  நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்,  நகராட்சி,  பேரூராட்சி அலுவலகங்களில் 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு மற்றும் பதிவு அஞ்சல் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். 
 தற்போது தமிழக அரசு  வேலைக்குச் செல்லும் பெண்கள் அம்மா மானிய விலையிலான ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கக் காலகெடுவை வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.