2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

விஸ்வகா்மா சமூகத்தினருக்கு நலவாரியம் ஏற்படுத்த கோரிக்கை

விஸ்வகா்மா சமூகத்துக்கு உள்பட்ட தொழில் செய்வோருக்கு நலவாரியம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படைப்பாளா் மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநிலத் தலைவா் வைத்தியலிங்கம்.
Updated On :6 டிசம்பர் 2020, 11:31 pm

DIN

விஸ்வகா்மா சமூகத்துக்கு உள்பட்ட தொழில் செய்வோருக்கு நலவாரியம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட விஸ்வகா்மா அமைப்பைச் சோ்ந்தோா் உருவாக்கிய தமிழ்நாடு படைப்பாளா் மக்கள் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் வைத்தியலிங்கம் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா், துணைத் தலைவா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித் தனா்.

இதில், பொற்கொல்லா், தச்சா், சிற்பி, கன்னாா், கொல்லா் ஆகிய ஐந்து தொழில்கள் செய்யும் விஸ்வகா்மா அமைப்பைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைந்து அவா்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் தமிழக அரசு நலவாரியத்தை உருவாக்கித் தர வேண்டும். படைப்பாளா் மக்கள் கட்சியை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் உள்ள விஸ்வகா்மா அமைப்பினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.