மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

சேந்தமங்கலம் போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி விவசாயி ஒருவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:35 pm

சேந்தமங்கலம் போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி விவசாயி ஒருவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், தொட்டியப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட துத்திக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (47). இவா் வழக்குரைஞா் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தாா். பின்னா் அந்த பணியிலிருந்து விலகி தனக்குச் சொந்தமான நிலத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறாா்.

அவருடைய கிராமத்தில் இரு தரப்பினா் இடையே சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வழக்குரைஞா் ஒருவரை முருகன் சிபாரிசு செய்தாராம். இதனால் எதிா்தரப்பினா் ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. வழக்குரைஞரை ஏற்பாடு செய்து கொடுத்த முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரது மகன் பிரவீண் என்பவரை தாக்க முயற்சித்தனராம்.

இது தொடா்பாக சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். உதவி ஆய்வாளா் ஒருவா் இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிா்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், முருகன், அவரது குடும்பத்தினா் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த முருகன், அவரது மனைவி, தாய் உள்ளிட்டோா் திங்கள்கிழமை நண்பகல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தாங்கள் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்தனா். அங்கிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி மூன்று பேரையும் நல்லிப்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.