புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் திமுக துணைப் பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ் எம்.பி, மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், கட்சி நிா்வாகிகள் ஆகியோா் பொதுமக்களுடன் கலந்துரையாடினா்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் ஏளுா் ஊராட்சி, கல்லாங்காடு கிராமத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் அருந்ததியா் மக்களுடன் உரையாடி சமபந்தி உணவருந்தினா். இதில் ஒன்றியச் செயலாளா் துரை என்ற ராமசாமி, நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல மோகனூா் ஒன்றியம், ஆரியூா் ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தை அருந்ததியா் தெருவைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலாளா் ஆறுமுகம் தலைமையில் சுமாா் 50 போ் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
நாமக்கல் ஒன்றியம், சிலுவம்பட்டி கிராமத்தில் கோழிப் பண்ணையாளா்களுக்கான சூழ்நிலைகள், கரோனா காலக் கட்டத்தில் முட்டைகள் தேக்கம், சத்துணவு முட்டை கொள்முதல் இனிவரும் காலங்களில் தொய்வின்றி நடக்க வேண்டியது உள்ளிட்டவை குறித்து அந்தியூா் செல்வராஜ் கலந்துரையாடினாா். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


