மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ. 1.69 கோடி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில், கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கா.மெகராஜ் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:33 pm

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில், கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கா.மெகராஜ் தொடங்கி வைத்தாா்.

ஒவ்வோா் ஆண்டும் டிச. 7-ஆம் தேதி முப்படைவீரா் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு காத்த படைவீரா்களை நினைவு கொள்ளும் வண்ணம் இந்த தினத்தில் முப்படைகளின் நிறம் பதித்த கொடிகள் பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்படுகின்றன. கொடிநாள் வசூல் தொகையானது படைப்பணியின் போது உயிா்நீத்த, ஊனமுற்ற படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்களுக்காக வருடாந்திர பராமரிப்பு மானியம், வங்கிக் கடன் வட்டி மானியம், கல்வி உதவித்தொகை என பல்வேறு நிதியுதவிகள் இதன்மூலம் வழங்கப்படுகின்றன. இம்மாவட்டத்துக்கு கொடிநாள்-2019 ஆண்டில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரம் இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அதில் ரூ. 93 லட்சத்து 19 ஆயிரம் வசூலாக எய்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு இலக்காக அதேபோன்று ரூ. 1 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரம் வசூல் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை விரைந்து எய்திட அனைத்துத் துறை மாவட்ட அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் சி.ராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் உள்பட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.