2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நாமக்கல்லில் கல்லூரிகள் திறப்பு: ஆர்வத்துடன் வந்த மாணவ, மாணவியர்

நாமக்கல்லில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்தனர். 

News image
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரிக்கு திங்கள்கிழமை வருகைபுரிந்த மாணவியர்.
Updated On :7 டிசம்பர் 2020, 6:39 am

DIN

நாமக்கல்லில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்தனர். 
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. 
இதனை அடுத்து, கரோனா தோற்று குறைந்து, பொது முடக்கம் தளர்வு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. டிச 2- ஆம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பம், பொறியியல்,  கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், அவர்களுக்கான விடுதிகளும் திறக்கப்பட்டது.
 கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்ததால் அதற்கேற்ப மாணவ, மாணவிகள் அனைவரும் 
முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனிமனித இடைவெளியில் மாணவ மாணவியர் வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
 முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் சுத்தம் செய்து, வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து மாணவ மாணவிகள் நோய் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.
 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கல்லூரி, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் நீண்ட வரிசையில் கல்லூரி வளாகம் முன்பு நின்று, காய்ச்சல் பரிசோதனை செய்தபின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.