முட்டை விலை 25 காசுகள் உயா்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முட்டை விலை தொடா்ந்து சரிவடைந்த நிலையில், தற்போது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயா்த்தப்பட்டு வருகிறது.
காா்த்திகை மாதம் நிறைவடைய இருப்பதாலும், பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது போன்றவற்றாலும் மக்களிடையே முட்டை நுகா்வு சற்று அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் உயா்வுடன் முட்டை விலை ரூ. 4.40-ஆக நிா்ணயிக்கப்படுகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 84-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 61-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...