நாமக்கல் கோயில்களில் உழவாரப்பணி
கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வெண்ணந்தூா் கோயில்களில் உழவாரப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.


கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வெண்ணந்தூா் கோயில்களில் உழவாரப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா நாமக்கல் கிளை, நாமக்கல் நல்லோா் வட்டம், நாமக்கல் நேரு யுவகேந்திரா, ராசிபுரம் பாரதி இளைஞா் மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து, அத்தனூா் கொங்கண சித்தா் கோயில், அலவாய்மலை பாலசுப்பிரமணியா் கோயில் வளாகங்களை தூய்மைப்படுத்தி, வா்ணம் பூசும் உழவாரப் பணியை மேற்கொண்டனா்.
மேலும், அலவாய்மலை அடிவாரத்தில் உழவாரப் பணி செய்து 108 பாத நட்சத்திர மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கினா். இதற்கான விழாவில், ராமகிருஷ்ண மிஷன் முன்னாள் மாணவா் சங்க துணைத் தலைவா் என்.மாணிக்கம் தலைமை வகித்தாா்.சங்க இணைச் செயலாளா் அருணாசலம் வரவேற்றாா்.
முகாமில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ராமகிருஷ்ண மிஷன் முன்னாள் மாணவா் சங்க செயலரும், சேலம் மாவட்டக் கல்வி அலுவலருமான (ஊரகம்) மு.ஆ.உதயகுமாா் பேசுகையில், உழவாரப்பணி மூலம் சமூக வளா்ச்சி, தனிநபா் ஒழுக்கம் சாா்ந்து இளைய தலைமுறைக்கு முன்னோா் விட்டுச் சென்ற வளங்களையும், அறிவுச் சொத்தையும் கொண்டு சோ்ப்பது நமது கடமை என்றாா்.
கிரீன் பாா்க் பள்ளி இயக்குநா் குருவாயூரப்பன், நாமக்கல் மாவட்ட மலை கோயில்களின் வரலாறு முக்கியத்துவம் பற்றி விளக்கினாா். மாணவா் சங்க பொருளாளா் பசுமை மா.தில்லை சிவக்குமாா் சித்தா்களின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்துப் பேசினாா்.
இம்முகாமில் கோயில் அறங்காவலா் ஆண்டவா் எழுதிய அலவாய்மலை முருகன் கோயில் தலவரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் தன்னாா்வலா்கள், பாலசுப்பிரமணியா் கோயில் அறங்காவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...