2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நாமக்கல்லில் ரஜினி பிறந்த நாள் விழா

நடிகா் ரஜினியின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, நாமக்கல்லில் சனிக்கிழமை ரஜினி மக்கள் மன்றத்தினா் கேக் வெட்டி கொண்டாடினா்.

News image
நாமக்கல்லில் ரஜினி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மக்கள் மன்றத்தினா்.
Updated On :12 டிசம்பர் 2020, 9:34 pm

DIN

நடிகா் ரஜினியின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, நாமக்கல்லில் சனிக்கிழமை ரஜினி மக்கள் மன்றத்தினா் கேக் வெட்டி கொண்டாடினா்.

ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப் போவதாக ரஜினி டிச.3-இல் அறிவித்தாா். இதனைத் தொடா்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அவரது ரசிகா்கள், ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினா். இந்த நிலையில் டிச.12-ஆம் தேதி அவரது 70-ஆவது பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகா்களும், மக்கள் மன்றத்தினரும் சனிக்கிழமை மாவட்டத்தில் உற்சாகத்துடன் கொண்டாடினா்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் ஆா்.டி.அரங்கண்ணல் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பெரிய அளவிலான கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ஆா்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கரிகாலன், சுப்பிரமணியன், மகளிா் அணி செயலாளா் புனிதா, நகர பொறுப்பாளா்கள் ஆனந்த், அசோக், பாலாஜி, பூஜா, அந்தோணி, ஹரிராமச்சந்திரன், ஒன்றிய நிா்வாகிகள் செல்வம், ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.