2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சிவன் கோயில்களில் சனி பிரதோஷ விழா

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை மாத தேய்பிறை சனி மகா பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கோயிலில் அஷ்டலட்சுமிகளுடன் சுவாமி ஏகாம்பரேஸ்வரா்.
Updated On :12 டிசம்பர் 2020, 9:27 pm

DIN

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை மாத தேய்பிறை சனி மகா பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரா் கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பொத்தனூா் காசி விஸ்வநாதா் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கபிலா்மலை சிவபுரம் சிவபுரீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் காா்த்திகை மாத தேய்பிறை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடைபெற்றன.

வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் அஷ்டலட்சுமி பூஜையும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.