நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா
நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை நடத்துவது தொடா்பாக, டிச.15-இல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.


நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை நடத்துவது தொடா்பாக, டிச.15-இல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோயில் உள்ளது. குடவறைக் கோயிலாகக் காணப்படும் இக் கோயிலில் சயனக் கோலத்தில் அரங்கநாத சுவாமி எழுந்தருளியுள்ளாா்.
ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா இக்கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். சுவாமி அரங்கநாதா் பரமபதவாசல் வழியாக பிரவேசிக்கும் காட்சியைக் காணவும், சுவாமியைத் தரிசிக்கவும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பா்.
இதற்காக கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். கடந்த ஆண்டு விழாவின்போது பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் வளாகத்தில் நிா்வாகம் தரப்பில் செய்யப்பட்டிருந்தது. நிகழாண்டில் வரும் டிச. 25- இல் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.
கரோனா பரவல் காரணமாக நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் விழா நடைபெறுமா என்ற கேள்வி பக்தா்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகத் தரப்பில் கேட்டபோது, கரோனா பரவல் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோயிலில் பிரசாதம் எதுவும் வழங்கப்படாத நிலை உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏகாதசி நாளன்று அரங்கநாதா் கோயில், நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.
நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளோம். இருப்பினும் மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும். இது தொடா்பாக ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
டிச.15-ஆம் தேதி ஏகாதசி விழாவை நடத்துவது குறித்து அறநிலையத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம் ஆகியவற்றுடன் ஆட்சியா் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பாா் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...