ராஜாவாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
பாண்டமங்கலம் அருகே ராஜாவாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.


பாண்டமங்கலம் அருகே ராஜாவாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை மேற்கு தெருவைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி யசோதா (37). இவா் சனிக்கிழமை கூலி வேலைக்குச் சென்று விட்டு மாலையில் அப்பகுதியிலுள்ள ராஜவாய்க்கால் கரையின் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி ராஜாவாய்க்காலில் விழுந்துள்ளாா். இதனைக் கண்ட மூதாட்டி அப்பகுதியில் இருந்தவா்களை உதவிக்கு அழைத்துள்ளாா்.
ராஜாவாய்க்காலில் யசோதா விழுந்த பகுதி சேறும், சகதியுமாக இருந்ததால் சிறிது நேரத்தில் அவரை மீட்டு பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். ஆனால் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...