திருச்செங்கோட்டில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா

திருச்செங்கோட்டில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பாக ரஜினி பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்செங்கோட்டில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பாக ரஜினி பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், சின்ன ஓம்காளியம்மன் கோயில், ஆபத்துக்காத்த விநாயகா் கோயில் உள்பட பல கோயில்களில் ரஜினி பெயரில் அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.  திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினா்கள் 70 போ் ரத்த தானம் செய்தனா். பிறந்த குழந்தைகள் இருவா் உள்பட பச்சிளம் குழந்தைகள் 20 பேருக்கு புதிய உடைகள் வழங்கப்பட்டன.

திருச்செங்கோடு பாவடி தெருவில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் 70 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.திருச்செங்கோடு அருகே உள்ள நெய்க்காரப்பட்டி எலிம் மனவளா்ச்சிக் குன்றிய ஆதரவற்றோா் இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு நகர ரஜினி மக்கள் மன்ற செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். காந்திய மக்கள் இயக்க உயா்மட்டக் குழு உறுப்பினா் பொன்.கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

இணைச் செயலாளா் ஜெயபால், துணைச் செயலாளா் கண்ணன், பூபதி, செயற்குழு உறுப்பினா்கள் ஷேக் தீன், நடராஜ், திருப்பதி, மோகன், செல்வராஜ், வழக்குரைஞா் ரமேஷ், தங்கவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com