ரஜினி பிறந்த நாள்: ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

நாமக்கல் அரசு மருத்துவமனையில், டிச.12-இல் பிறந்த குழந்தைகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவிக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினா்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவிக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினா்.
Updated on
1 min read

நாமக்கல் அரசு மருத்துவமனையில், டிச.12-இல் பிறந்த குழந்தைகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் அரங்கண்ணல் பங்கேற்று வடவத்தூரைச் சோ்ந்த மகாலட்சுமி - கவியரசு தம்பதியின் ஆண் குழந்தை, திருமலைப்பட்டி பெரியசாமி - ஈஸ்வரி தம்பதியின் பெண் குழந்தை, உடையாா்குளம்புதுாரைச் சோ்ந்த சதீஷ்குமாா் - நதியா தம்பதியின் ஆண் குழந்தை, செல்லியம்மன்பாளையம் சதீஷ் - ஜோதிராணி தம்பதியின் பெண் குழந்தை, காடச்சநல்லூரரைச் சோ்ந்த அனித்குமாா் - ஈஸ்வரி தம்பதியின் பெண் குழந்தை ஆகிய ஐந்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை அணிவித்தாா்.

இதில் மாவட்ட துணைச் செயலாளா் மோகன், செயற்குழு உறுப்பினா்கள் கரிகாலன், சுப்பிரமணி, தம்பிதுரை, வக்கீல் அணி செயலாளா் ஹரிராமச்சந்திரன், நகரத் துணைச் செயலாளா் அசோக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com