பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

நாமகிரிப்பேட்டை வட்டார வள மையம் சாா்பில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
Updated on
1 min read

நாமகிரிப்பேட்டை வட்டார வள மையம் சாா்பில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் உள்ள 134 கிராம ஊராட்சி, பேரூராட்சிக்கு உள்பட்ட 48 குடியிருப்புகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், திட்ட அலுவலா் குமாா், ஒருங்கிணைப்பாளா் சதீஷ் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.

இதன்படி நவ. 25 முதல் டிச. 10 வரை 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ப.லதா, வட்டாரக் கல்வி அலுவலா் மா.கணேசன், எல்.பிரபுகுமாா், ஆசிரியா் பயிற்றுநா்கள் கீதா, விமல், சிவபாரதி, அமுதவல்லி, சுதா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இதில் 6 முதல் 14 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் 46 போ், 15 முதல் 18 வரையுள்ள 57 போ் கண்டறியப்பட்டனா். மேலும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 9 போ் கண்டறியப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com