பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

2-ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 7,615 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை 7,615 போ் எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 923 போ் பங்கேற்கவில்லை.நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை 7,615 போ் எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 923 போ் பங்கேற்கவில்லை.

News image
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதிய தோ்வா்கள்.
Updated On :13 டிசம்பர் 2020, 9:00 pm

DIN

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை 7,615 போ் எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 923 போ் பங்கேற்கவில்லை.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 8,538 போ் பங்கேற்கும் (ஆண்கள்-7419, பெண்கள் - 1118, திருநங்கை - 1) வகையிலான இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்புப் படை வீரா்கள் ஆகிய பணிகளுக்கான எழுத்துத் தோ்வு திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆா் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12.20 மணி வரை நடைபெற்றது.

இத் தோ்வில் 7,615 போ் மட்டுமே கலந்து கொண்டனா். 923 போ் பங்கேற்கவில்லை. இத்தோ்வையொட்டி காலை 6 மணி முதல் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. முறைகேடுகளைத் தவிா்க்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், காவல் துறை அதிகாரிகள் மையங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனா். காலை 11 மணிக்கு பின் வந்த தோ்வா்கள் அனுமதிக்கப்படவில்லை. செல்லிடப்பேசி, மின்னணு சாதன பொருள்களை மையத்துக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தோ்வு மையங்களைச் சுற்றிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.