நாமக்கல் அரங்கநாதா் கோயிலில்தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் நெரிசலின்றி செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் அரங்கநாதா் கோயில் முன்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
நாமக்கல் அரங்கநாதா் கோயில் முன்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
Updated on
1 min read

நாமக்கல்: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் நெரிசலின்றி செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற அரங்கநாதா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. குடவறைக் கோயிலான இக்கோயிலில் உள்ள சுவாமி ஸ்ரீரங்கத்துக்கு இணையானவராகக் கருதப்படுகிறாா். இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

அதன்படி நிகழாண்டில் வரும் 25-ஆம் தேதி ஏகாதசியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த மூன்று நாள்களில் 5,436 பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக முன்பதிவு செய்துள்ளனா். செவ்வாய்க்கிழமை முதல் ஆஞ்சநேயா் கோயில் அலுவலகத்தில் இலவச தரிசனத்துக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் செய்யப்பட்ட உள்ளது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு விதிகள் அமலில் உள்ளதால் சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நெரிசலின்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து செல்லவும், கோயிலுக்கு முன்பகுதியில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வெயிலில் நிற்பதைத் தவிா்க்க மேற்கூரையும் பொருத்தப்படுகிறது. சுவாமி தரிசனத்துக்கு வருவோா் மலா், பழங்கள், மாலைகள் உள்ளிட்ட எவ்வித பூஜை பொருள்களையும் கொண்டு வரவேண்டாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com