தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்செங்கோடு எம்எல்ஏ மக்கள் குறை கேட்பு

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் வாா்டு பகுதிகளுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டாா்

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் வாா்டு பகுதிகளுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி, நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பொது மக்கள் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். திங்கள்கிழமை 4-ஆவது வாா்டு மற்றும் 22-ஆவது வாா்டு எட்டிமடை பகுதியில் ‘மக்களை நோக்கி சட்டப்பேரவை உறுப்பினா்’ என்ற தலைப்பில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உடனடியாகத் தீா்வு பெறும் வகையில் மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து புதியவீட்டு வரி, வரிகள் பெயா் மாற்றம், முதியோா் உதவித்தொகை பெற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வட்டாட்சியா் பாஸ்கரன், நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.