அரசு கல்லூரியில் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாணவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை.
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாணவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை.
Updated on
1 min read

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எட்டு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக இயங்கப்படாத நிலையே இருந்து வருகிறது.

டிச .2-இல் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்பின் டிச. 8-இல் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியா் கரோனா விதிகளை பின்பற்றி கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டனா். தற்போது சுழற்சி முறையில் மாணவா்கள் கல்லூரிக்கு வருகின்றனா். அண்மையில் சென்னை ஐஐடியில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அனைத்து கல்லூரிகளிலும் மாணவ, மாணவியருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இறுதியாண்டு பயிலும் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க கல்லூரி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com