சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வேளாண் சங்கத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:41 am

DIN

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமையன்று 3500 மூட்டை பருத்தி வரத்து இருந்தது.

ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 5,825 முதல் ரூ. 6,070 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 6,190 முதல் ரூ. 6,390 வரையிலும், சுரபி ரகம் ரூ. 7,290 முதல் ரூ. 7,450 வரையிலும் விலை போயின. மொத்தம் ரூ.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மாவட்ட வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்தனா்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.