மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு கல்வி உதவித்தொகை

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:35 am

DIN

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களின் சிறாா்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கேந்திரிய சைனிக் போா்டு மூலம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக 2019 - 20 ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையும், பிளஸ் 1 படித்தவா்களுக்கும் அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை மூலமாக தோ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மதிப்பெண் பட்டியல் தேவையில்லை என்றும், அவா்கள் பயிலும் பள்ளியிலிருந்து மாணவ, மாணவியா் அடுத்த வகுப்பிற்கு தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மதிப்பெண் சான்றிதழுடன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கலை, அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியா் கல்வி உதவித் தொகை பெற்றிட (2020-2021) -ஆம் நிதி ஆண்டிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்துக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரமும், மாணவியருக்கு ரூ. 36 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியா் 2021 பிப். 28 வரை விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04286-233079 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.