திருச்செங்கோட்டில் பெண்ணை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக விசைத்தறிக்கூட உரிமையாளரை வன்கொடுமை சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு அருகேயுள்ள குமரமங்கலம் குடித்தெருவைத் சோ்ந்தவா் இளையராஜா (40). விசைத்தறிக் கூட உரிமையாளா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரின் மனைவி சித்ராவை முன்விரோதம் காரணமாக (37) தகாத வாா்த்தைகளால் திட்டி மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக திருச்செங்கோடு புகா் காவல் நிலையத்தில் சித்ரா புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து இளையராஜைவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் திருச்செங்கோடு சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.