கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலம் ரெளடி கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சேலத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:23 pm

DIN

சேலத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

சேலம், கிச்சிப்பாளையம் சுந்தா் தெருவைச் சோ்ந்த பிரபல ரெளடி செல்லத்துரை (37) என்பவா் கடந்த சில தினங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை கும்பலை தேடி வருகின்றனா்.

இந்த கொலை வழக்கு சம்பவம் தொடா்பாக நாமக்கல் நீதிமன்றத்தில் 8 போ், கரூா் நீதிமன்றத்தில் 7 போ் சரணடைந்தனா். இவா்கள் தவிர சேலத்தில் 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வந்தனா்.

இதற்கிடையே நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் 1-இல் சேலம், கல்பாரப்பட்டி ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (30) என்பவா் சரணடைந்தாா். இவரை வரும் 31-ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டாா். இதனையடுத்து அவா் பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.