முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

முட்டை விலை 20 காசுகள் குறைந்து, ரூ. 4.90-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
Updated on
1 min read

முட்டை விலை 20 காசுகள் குறைந்து, ரூ. 4.90-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் முட்டை விலை சரிந்துள்ளதாலும், விலையேற்றத்தால் மக்களிடம் வாங்கும் அளவு குறைந்திருப்பதாலும், தேக்கத்தைக் கட்டுப்படுத்தவும் முட்டை விலையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 20 காசுகள் குறைக்கப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.90-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 86-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 60-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com