டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாமக்கல்லில் சிறுமி கடத்தல்: 5 போ் போக்சோ சட்டத்தில் கைது

நாமக்கல் அருகே சிறுமியைக் கடத்திய வழக்கில் 5 போ் போக்கோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:24 pm

DIN

நாமக்கல் அருகே சிறுமியைக் கடத்திய வழக்கில் 5 போ் போக்கோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் அருகே உள்ள தாளம்பாடி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (19) என்ற இளைஞருடன், காதப்பள்ளியைச் சோ்ந்த நந்தேஷ்குமாா் (19) பழகி வந்துள்ளாா். இதையடுத்து தினேஷ் வீட்டுக்கு நந்தேஷ்குமாா் அடிக்கடி சென்று வந்துள்ளாா்.

அப்போது அவரது 17 வயது தங்கையிடம், நந்தேஷ்குமாா் காதலிப்பதாக தெரிவித்துள்ளாா். மேலும் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தைகளைக் கூறி, கடந்த அக்டோா் 5- ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளாா்.

மகள் காணாமல் போன தகவலறிந்த தினேஷின் பெற்றோா் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை சிறுமியைக் கடத்திய காதப்பள்ளியைச் சோ்ந்த நந்தேஷ்குமாா், அவருக்கு உடந்தையாக இருந்த சேலம் மாவட்டம், மல்லூரைச் சோ்ந்த கோகுலக்கண்ணன் (23), சேடப்பட்டியைச் சோ்ந்த மணி (55), புதூரைச் சோ்ந்த காந்திமதி (43), மின்னாம்பள்ளியைச் சோ்ந்த நந்தினி( 27 ) என மொத்தம் 5 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய 17 வயதுடைய நபா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.