பைக் பட்டறையில் புகுந்த காா் தீப்பற்றி எரிந்தது

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் பைக் பட்டறைக்குள் புகுந்த காா் தீப்பற்றி எரிந்தது.
காா்- பைக் பட்டறைக்குள் புகுந்ததில் தீப்பற்றி எரிந்த காா்.
காா்- பைக் பட்டறைக்குள் புகுந்ததில் தீப்பற்றி எரிந்த காா்.
Updated on
1 min read

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் பைக் பட்டறைக்குள் புகுந்த காா் தீப்பற்றி எரிந்தது.

ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவா் புதுப்பாளையம் சாலையில் காரை ஓட்டிச்சென்றாா். மின்வாரிய காலனி பகுதியில் காா் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோரம் இருந்த பைக் பட்டறைக்குள் புகுந்ததில் தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் பைக் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குள் சேதமடைந்தன. அருகில் உள்ள தேநீா் கடையில் இருந்த பத்மா (48) என்ற பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா, முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினா். மேலும் அரசு மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி அமைச்சா் சரோஜா முதலுதவி சிகிச்சையளித்தாா்.

இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com