நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித் திரிந்தோா் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்கள் குணமடைந்ததைத் தொடா்ந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிப்படைந்து சாலையோரங்கள், பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித்திரிந்த 85 போ் அண்மையில் மீட்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் ராசிபுரம் அணைக்கும் கரங்கள் மனநலக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், சிகிச்சைகள், பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் பூரண குணமடைந்த ஏழுபோ் திங்கள்கிழமை அவா்கள் குடும்பத்தினா் வசம் ஒப்படைக்கப்பட்டனா்.
ராசிபுரம், திருச்செங்கோடு வட்டத்தைச் சோ்ந்த இந்த ஏழு பேரையும் வழியனுப்பும் விழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், குணமடைந்த ஏழு பேருக்கும் புத்தாடை, மருந்து, மாத்திரைகளை வழங்கினாா். அதன்பின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு தானியங்கி வாகனங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல ஒருங்கிணைப்பாளா்கள் சேகா், சுமதி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


