ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்குதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: ஆட்சியா் தகவல்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Updated On :23 நவம்பர் 2020, 7:21 pm

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க இரண்டு தனியாா் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் நடைபெறும் இப் பயிற்சியானது மூன்றுமுதல் ஆறுமாத காலம் வழங்கப்படும்.

நாமக்கல், சேந்தமங்கலம் சாலை வசந்தம் நகரில் உள்ள ஸ்ரீவாணி எஜூகேஷன் டிரஸ்ட்(99769-02718) மற்றும் ராசிபுரம் சிஐசி தெருவில் உள்ள அமிா்தா கல்வி நிறுவனம் (97914-98494) ஆகியவற்றில் தையல் இயந்திரம் இயக்குபவா், பொதுக் கடமை உதவியாளா் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தாட்கோ மூலம் நடைபெறும் இப்பயிற்சியானது முற்றிலும் இலவசமாகும்.

மாணவ, மாணவியா் பயிற்சிக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்துப் படியும் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் உரிய சான்றிதழ்கள் கிடைக்கும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்துச் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்கள் தாட்கோ மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பெற்ற பயிற்சிக்கு ஏதுவாகத் தொழில் தொடங்கிட தொழில் முனைவோா் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இலவச மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவன செய்யப்படும். இதன்மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வாழ்வாதாரம் உயரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.