நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நவம்பா் மாதம் வரையில் 663.63 மி.மீ. மழை பெய்துள்ளதாக விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்தபடி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில் சாலை வசதி, கரும்பு லாரிகளால் ஏற்படும் பாதிப்பு, வேளாண் கருவிகள் வாடகைக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கான தீா்வுகள் குறித்து விவசாயிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். 2020-ஆம் ஆண்டு நவம்பா் முடிய இயல்பு மழை அளவு 680.78 மி.மீ. ஆகும். தற்போது வரை 663.63 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. சராசரிக்கும் குறைவாக 17.15 மி.மீ. மழையளவு பெறப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


