விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
எலச்சிபாளையம் பகுதி அஞ்சல் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சுரேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளைத் தாக்கிய மத்திய அரசைக் கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட 20 பேரை போலீசாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...