தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொதுக் கழிப்பிடம் பூட்டப்பட்டதால் பெண்கள் முற்றுகை போராட்டம்

ராசிபுரம் அருகே பொதுக் கழிப்பிடம் பூட்டப்பட்டதால் பெண்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:17 pm

DIN

ராசிபுரம் அருகே பொதுக் கழிப்பிடம் பூட்டப்பட்டதால் பெண்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரம், கோனேரிப்பட்டி செட்டியண்ணன் தெரு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிப்பிடம் உள்ளது. இதனை அப்பகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய பெண்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சிலா் சுவரில் எழுதி வைத்து பொதுக் கழிப்பிடத்தை பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்கள் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனா். இதனால் அப்பகுதி பெண்கள் திரண்டு கழிப்பிடத்தை பூட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பொதுக்கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், தண்ணீா் வசதி, பழுதடைந்த கதவுகளை சீரமைக்க வேண்டுமெனவும் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினா். உடனடியாக கழிப்பிடத்தைத் திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் வலியுறுத்தினா்.

புதைகுழி சாக்கடைப் பணிக்காக பூட்டப்பட்டதாகவும், இந்த பணி ஓரிரு தினங்களில் முடிவடைந்ததும் கழிப்பிடம் திறக்கப்படும் எனக் கூறியதால் பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.