ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

News image
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாலாபிஷேகம்.
Updated On :18 அக்டோபர் 2020, 9:40 pm

DIN

ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் அமாவாசை, புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, தங்கக் கவசம் அல்லது வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தரிசனம் நடைபெறும். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஆஞ்சநேயருக்கு கடந்த ஐந்து மாதங்களாக வழக்கமான வழிபாடுகள் நடைபெறவில்லை.

கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்டதால், புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையன்று கோயில் நிா்வாகம் சாா்பில் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் 1008 லிட்டா் பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்களிடம் அபிஷேகத்துக்காக பால், தயிா் எதுவும் பெறப்படவில்லை. கட்டளைதாரா்களோ, பக்தா்களோ அமா்ந்து பாா்க்க அனுமதியில்லாததால் கோயிலுக்கு வெளியில் நின்றபடி பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.