திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முட்டை விலை 5 காசுகள் உயா்வு: ரூ.4.20-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.4.20 -ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :7 செப்டம்பர் 2020, 10:06 pm

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.4.20 -ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கரோனா பொது முடக்கத் தளா்வால் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதாலும், பிற மண்டலங்களில் விலை தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதாலும் முட்டை விலை 5 காசுகள் உயா்த்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.20-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-421, விஜயவாடா - 455, பாா்வாலா - 427, ஹோஸ்பெட் - 410, மைசூரு-445, சென்னை - 440, மும்பை - 473, பெங்களூரு -445, கொல்கத்தா-485, தில்லி-445.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ விலை ரூ.119-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.108-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.