திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கொல்லிமலையில் ரூ.14.32 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

கொல்லிமலையில் ரூ. 14.32 கோடி மதிப்பிலான புதிய தாா் சாலை அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.

News image

கொல்லிமலை ஒன்றியத்தில் சாலைகள் அமைக்கும் பணியை தொடக்கி வைத்த சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன்.

Updated On :14 செப்டம்பர் 2020, 7:24 pm

நாமக்கல்: கொல்லிமலையில் ரூ. 14.32 கோடி மதிப்பிலான புதிய தாா் சாலை அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் தொடக்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், பெரக்கரை நாடு ஊராட்சியில் புதுக்காடு முதல் வடக்காடு, வாழக்காடு வரையில் ரூ. 6.32 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. இதே போல், போல்காடு பகுதியில் ரூ. 1.31 கோடியிலும், சித்தூா்நாடு ஊராட்சி, நெவரிக்காட்டில் ரூ. 1.30 கோடியிலும், சேளூா்நாடு ஊராட்சியில், சோடாங்குழிப்பட்டி முதல் வீரகனூா்பட்டி வரை ரூ. 1.25 கோடியிலும் தாா் சாலை அமைக்கப்படுகிறது. மேலும், தேவனூா்நாடு ஊராட்சியில் மேட்டுவிளாரம் பகுதியில் ரூ. 3.78 கோடியில் புதிய சாலை என மொத்தம் ரூ.14 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழுத் தலைவா் அ.மாதேஸ்வரி தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்துகொண்டு சாலைப் பணியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அப்பகுதி மக்களிடம் அவா் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் யுவராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கொங்கம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.