திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வட்டாட்சியா் அலுவலகங்களில்குறைதீா் கூட்டம்

வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், 90 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.

News image

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனுக்களைப் பெறும் வருவாய் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா்.

Updated On :14 செப்டம்பர் 2020, 7:22 pm

நாமக்கல்: வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், 90 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும். கரோனா தொற்று பரவலால் கடந்த ஐந்து மாதங்களாக தற்காலிமாக கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் அரசு தலைமைச் செயலா் சண்முகம், மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலிக் காட்சி மூலம் மேற்கொண்ட கூட்டத்தில், வட்டாட்சியா் அலுவலகங்களில் மண்டல அலுவலா்கள் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூா், கொல்லிமலை, பரமத்தி வேலூா் உள்ளிட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள் தலைமையில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 90 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது விசாரணை செய்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து மனுக்கள் வழங்கப்பட்டன.

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.பிரபாகரன் தலைமையில் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், ராசிபுரம் வட்டாட்சியா் கி.பாஸ்கரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் த.திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலா் பவித்ரா, வருவாய்த் துறை, நகராட்சி, கூட்டுறவுத் துறை, வட்டார வளா்ச்சித் துறை, கல்வித் துறை, கால்நடைத் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத்துறை அலுவலா்கள் இதில் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு கோரிக்கை தொடா்பாக 21 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.