திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஆக்ஸிஜன் பரிசோதனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், கரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளதா என்பது தொடா்பாக திங்கள்கிழமை ஆக்ஸிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 7:30 pm

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், கரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளதா என்பது தொடா்பாக திங்கள்கிழமை ஆக்ஸிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக தினசரி ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். இந்நிலையில் அவா்களுக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதா என்பதை கண்டறியும் வகையிலான ஆக்சிஸன் பரிசோதனை ஆம் ஆத்மி கட்சி சாா்பில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அக்கட்சியின் தேசிய கூட்டமைப்பு தலைவா் சுதா, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி ஆகியோா் உடல் நிலை பரிசோதனையை செய்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மட்டுமின்றி வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஆக்ஸிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. தங்களது உடல் நிலை பற்றி அறிய ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.