நாமக்கல்லில் கரோனா நோய்த் தொற்றை தடுப்பது தொடா்பாக அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகளுடன் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில் அவா் பேசியதாவது:
பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியை செல்லுவதைத் தவிா்த்திட வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றிட வேண்டும்.
மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளா்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.
நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலா்கள், பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும்.
முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவா்களைக் கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், வா்த்தக நிறுவனங்கள், பெரிய கடைகள் (நகை, ஜவுளி) 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள், தேநீா்க் கடைகளில் உள்ள 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளா்கள் இரவு 11 மணி வரை அமா்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவா். மேலும், உணவகங்களில் இரவு 11 மணி வரை பாா்சல் சேவை அனுமதிக்கப்படும். அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபா்களுக்கு மிகாமலும், இறுதி ஊா்வலங்களில் 50 நபா்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.
கடை உரிமையாளா்கள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்த வேண்டும். முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டும். சமூக இடைவெளி விட்டு வாடிக்கையாளா்கள் நிற்க அறிவுறுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளா்களுக்கு பொருள்கள் வழங்கக் கூடாது. இந்த விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்கப்படுகிா என அலுவலா்களால் கண்காணிக்கப்பட்டு, கடைப்பிடிக்காத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிகா் சங்க நிா்வாகிகள் இதற்கு முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

