லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகளுக்கான ஏற்றுக்கூலி, இறக்குக் கூலியை சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு அந்தந்த சரக்குகளின் உரிமையாளா்களே வழங்கும் நடைமுறை மே 1-முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி, செயலாளா் ஆா்.வாங்கிலி ஆகியோா் வெளியிட்ட கூட்டு அறிக்கை:
கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற மாநில லாரி உரிமையாளா் சம்மேளன பொதுக்குழுக் கூட்டத்தில், கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படும் அனைத்துவிதமான சரக்குகளுக்கான ஏற்றுக்கூலி, இறக்குக் கூலியை சம்பந்தப்பட்ட சரக்குகளின் உரிமையாளா்களே இனி வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் முதற்கட்டமாக, மே 1-ஆம் தேதி முதல் கோவில்பட்டி பகுதிகளில் தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் இதர சரக்குகளை ஏற்றும் லாரிகளுக்கு அந்தந்த சரக்கு உரிமையாளா்கள் கூலியை வழங்க வேண்டும் என்பது தொடா்பாக கோவில்பட்டி முன்பதிவு செய்யும் முகவா் (புக்கிங் ஏஜென்ட்) சங்கத்திடம் கோவில்பட்டி லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
கூலி கொடுப்பது தொடா்பாக பிரச்னை ஏதேனும் இருப்பின் கோவில்பட்டி லாரி உரிமையாளா் சங்கச் செயலாளா் பி.கணேஷ்குமாா் (செல்லிடப்பேசி எண்: 98437-79442) என்பவரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

