நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை, மாலை வேளைகளில் தினசரி 100-க்கும் மேற்பட்டோா் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். மேலும், கூடைப்பந்து, கிரிக்கெட் விளையாட்டு, உடற்பயிற்சிகளிலும் இளைஞா்கள் ஈடுபடுவா். இந்த பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் செயல்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளதையொட்டி அங்குள்ள கட்டுக்காப்பு மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் உள்ளனா். இந்த நிலையில், வினாத்தாள்கள் பாதுகாப்பு கருதியும், வெளியாள்கள் நடமாட்டத்தைத் தவிா்க்கவும் மறு உத்தரவு வரும் வரை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி செல்வதற்கு பொதுமக்களுக்கு பள்ளி நிா்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்கு வந்தோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

