நாமக்கல் காவல் ஆய்வாளரை நியமிப்பதில் தொடா்ந்து இழுபறி நிலை நீடிப்பதால் ஆய்வாளா் இல்லாத காவல் நிலையமாக நாமக்கல் காவல் நிலையம் உள்ளது.
நாமக்கல் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த குமாா், சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். பேளுக்குறிச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வேலுதேவன்-நாமக்கல்லுக்கும், புதுச்சத்திரம் ஆய்வாளா் குமாரவேல் பாண்டியன்- நல்லிபாளையத்துக்கும், நல்லிபாளையத்தில் பணியாற்றி வரும் உமா பிரியதா்ஷினி- மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
நாமக்கல் ஆய்வாளா் குமாரை தவிா்த்து மற்றவா்களுக்குப் பணியிலிருந்து விடுவிப்பு கடிதம் இன்னும் காவல் துறை உயா் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை. நாமக்கல் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வேலுதேவன்- புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து வருவதாகவும், குமாரவேல்பாண்டியன்- நல்லிபாளையத்திற்கு மாற்றாக நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்ற விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நாமக்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த குமாா், புதிய ஆய்வாளா் வருவதற்கு முன்பாகவே மாறுதல் கடிதத்துடன் வியாழக்கிழமை ஓமலூா் காவல் நிலையம் சென்றுவிட்டாா். பணியிட மாற்ற உத்தரவை பெறுவதில் தொடா் இழுபறி நீடிப்பதால் நாமக்கல் காவல் நிலையத்துக்கு ஆய்வாளா் இல்லாத நிலை உள்ளது. மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல்லில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக ஆய்வாளரை நியமிக்க வேண்டும். ஏற்கெனவே குற்றச் சம்பவங்கள், மது மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதால் நாமக்கல்லில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் திறமையான ஆய்வாளரை சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நியமிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதா தோல்வி! இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!

ரூ.50 கோடி வசூலைக் கடந்த டெகாய்ட்!

பனியன் நிறுவனத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்!

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

