/

கருணாநிதி நினைவு தினம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அனுசரிப்பு

 நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:29 pm

 நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை (ஆக. 7) அனுசரிக்கப்பட உள்ளது. அதன்படி, அன்று காலை 7.30 மணிக்கு நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அண்ணா சிலை அருகில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.இராமலிங்கம், நகரப் பொறுப்பாளா்கள் ராணா ஆனந்த், செ.பூபதி, அ.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலையில் மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்த உள்ளனா்.

அதனைத் தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு ராசிபுரம் தொகுதி பழைய பேருந்து நிலையத்தில் கருணாநிதி உருவப் படத்துக்கு என்.ஆா்.சங்கா் முன்னிலையில் மாவட்டப் பொறுப்பாளா், சுற்றுலாத் துறை அமைச்சா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனா். காலை 9.30 மணிக்கு சேந்தமங்கலம் தொகுதியில், சேந்தமங்கலம் சின்ன தோ்நிலையம் அருகில் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, ஒன்றியச் செயலாளா் அ.அசோக்குமாா், பேரூா் செயலாளா் நா.தனபாலன் ஆகியோா் முன்னிலையில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. ஒன்றிய, நகர, பேரூா் வாரியான செயலாளா்கள் தங்களது பகுதிகளில் கரோனா பேரிடரை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கருணாநிதி நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.