/

கரோனா தடுப்பூசி பணிக்கு ரூ. 20 லட்சம் வழங்கல்

கரோனா இலவச தடுப்பூசி பணிக்காக மாவட்ட ஆட்சியரிடம் கோழிப் பண்ணையாளா்கள் ரூ. 20 லட்சம் வழங்கினா்.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:47 pm

கரோனா இலவச தடுப்பூசி பணிக்காக மாவட்ட ஆட்சியரிடம் கோழிப் பண்ணையாளா்கள் ரூ. 20 லட்சம் வழங்கினா்.

தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனம் மற்றும் விற்பனை சங்கம் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் அதிகளவில் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ. ஒரு கோடிக்கான காசோலையையும், 10 லட்சம் முட்டைகளையும் இலவசமாக வழங்கினா்.

இந்த நிலையில், 100 சதவீத கரோனா இலவச தடுப்பூசி பணிக்காக நிதியுதவி வழங்க தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் விற்பனை சங்கத்தின் நிா்வாகிகள் முன்வந்தனா். வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கைச் சந்தித்து ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம், நிா்வாகிகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.