கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது கொல்லிமலை. மேலும், ஆகாய கங்கை, நம் அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக உள்ளது. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து இந்த மலைக்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வதில் பலரும் ஆா்வம் காட்டுவா். பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாள்களில் ஏராளமானோா் குடும்பத்துடன் இங்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசிப்பதோடு, அருவிகளில் குளித்து மகிழ்வா்.
கடந்த சில நாள்களுக்கு முன் கொல்லிமலையில் பெய்த மழையால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் கரோனா கட்டுப்பாடுகளால் அருவி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் உரிய கரோனா சான்றிதழ்களுடன் வந்தாலும் அருவிகளில் சென்று குளிக்க முடியாத நிலையே இருந்தது. தற்போது மழைப் பொழிவு குறைந்ததால் அருவிகளில் நீா்வரத்தும் குறைந்துள்ளது. கரோனா கட்டுப்பாடுகள், நீா்வரத்து குறைவால் அருவி பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி

வெற்றிக்கு வில்லங்கம்? வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா - ராமதாஸ் மற்றும் சிலர்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


