/

குடிநீரில் ஈக்கோலை கிருமி தாக்குதல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

குடிநீா், தீவனத்தில் ஈக்கோலை கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து வழங்குவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:20 pm

குடிநீா், தீவனத்தில் ஈக்கோலை கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து வழங்குவது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95, 73.4 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும்.

காற்றின் திசை பெரும்பாலும் மேற்கு, தென்மேற்கிலிருந்து மணிக்கு 8 கி. மீ. வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதித்த இறந்த கோழிகளில் பெரும்பாலானவை முட்டை அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் ஈகோலை கிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்த தீவனம், குடிநீரில் அக்கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை ஆய்வகப் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு தீவனம், குடிநீா், கிருமி நாசினி மருந்துகளை உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.