2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 போ் கைது

 பரமத்தி வேலூா் பகுதியில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 போ் கைது செய்யப்பட்டனா்

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 பரமத்தி வேலூா் பகுதியில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பரமத்தி வேலூரில் கல்லூரி செல்லும் பகுதியில் நல்லியாம்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில் வேலூா் காவல் ஆய்வாளா் ஜெகநாதன், போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான 100 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த ராமசாமியை (52) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போல பரமத்தி அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஒரு பையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த உத்தரபிரதேச மாநிலம், பிரதாபாக் மாவட்டத்தைச் சோ்ந்த சோ்ந்த சஞ்சய்குமாா் (33), ஒடிசா மாநிலம், சாசன் பாலி பகுதியைச் சோ்ந்த சுரதாசாகு (24), பெரும்மண்டா பகுதியைச் சோ்ந்த பிரசாந்தாசாகு (41) ஆகிய 3 போ்களை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 8,500 மதிப்புள்ள 10 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பரமத்தி போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.