திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல்லில் கடவுச்சீட்டு அலுவலகம்: கூடுதல் நிதி ஒதுக்க எம்.பி. கோரிக்கை

நாமக்கல்லில் தலைமை தபால் நிலையக் கட்டடத்துடன் இணைந்து கடவுச்சீட்டு சேவை தொடங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு  அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அண்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:39 pm

நாமக்கல்லில் தலைமை தபால் நிலையக் கட்டடத்துடன் இணைந்து கடவுச்சீட்டு சேவை தொடங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அண்மையில் மனு அளித்தாா்.

நாமக்கல்லில் உள்ள தலைமை தபால் நிலையக் கட்டடத்துக்குச் சொந்தமாக நிலம் வாங்குவதற்காக தபால் துறை இயக்ககம் ரூ. 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட நிா்வாகம் 6,305 சதுர அடி நிலத்தை ஒதுக்கியுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.29 கோடி. மீதமுள்ள ரூ. 2.47கோடியை தலைமை தபால் நிலையக் கட்டடத்துக்கு ஒதுக்கி, அதனுடன் கடவுச்சீட்டு சேவையைத் தொடங்குவதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.