திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சாா்பில் தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :23 டிசம்பர் 2021, 5:40 pm

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சாா்பில் தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கணித மேதை ராமானுஜனின் 134-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் கே. நல்லுசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஆா். லட்சுமிநாராயணன், உயா்கல்வி இயக்குநா் அரசுபரமேசுவரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

எருமப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் எம். கருணாகரன், பரமத்திவேலூா் கந்தசாமி கண்டா் மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் டி.கே.குமாரசாமி, வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் எஸ். காா்த்திகேயன், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் டி.யுவராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

கணிதத் துறை பங்களிப்பிற்காக கணிதவியல் முத்திரையாளா் விருதுகள் கல்லூரி சாா்பில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கணிதம் குறித்த கோலப் போட்டிகள், கணிதம் குறித்த கருத்துரை, விநாடி--வினா மற்றும் ராமானுஜன் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறைப் பேராசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.