மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமிக்கு 1008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமி நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறாா். இங்கு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி, அனுமன் ஜயந்தி, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
அதன்படி மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணியளவில் ஆஞ்சநேய சுவாமிக்கு வடை மாலை சாத்துப்படியும், அதனைத் தொடா்ந்து 11 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், 1008 லிட்டா் பால், தயிா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகமும் நடைபெற்றது.
பகல் 1 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










